தமிழகம் மற்றும் புதுச்சேரியை அச்சுறுத்திய நிவர் புயல், இன்று நள்ளிரவு கரையக் கடக்கத்தொடங்கியது. அதி தீவிர புயலாக வலுப்பெற்று நிவர் புயல் கரையைக் கடக்கத்தொடங்கிய போது, சென்னை, கடலூர், புதுச்சேரி உள்ளிட்ட இடங்களில் கனமழை பெய்தது.
புயல் கரையைக் கடக்கத் தொடங்கிய போதே, நிவர் புயல் வலுவிழந்து தீவிர புயலாக மாறியது. இந்தப் புயலின் மையப்பகுதி இரவு 11.30 மணி முதல் அதிகாலை 2.30 மணி வரைக்குள் புதுச்சேரி கடலோரப்பகுதியில் கரையக் கடந்ததாக இந்திய வானிலை ஆய்வு மையம் டுவிட்டரில் தெரிவித்துள்ளது. தற்போது புயலின் பின்பகுதி கரையைக் கடந்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரிக்கு அருகே 16 கி.மீட்டர் வேகத்தில் கரையக் கடந்தது என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.