மின்கட்டண அளவீட்டின்போதே, மின் கணக்கீட்டாளர் மூலம் கட்டணம் வசூலிக்கும் புதிய முறையை விரைவில் அமல்படுத்தபோவதாக தமிழக மின்சார வாரியம் தெரிவித்துள்ளது. பாயின்ட் ஆஃப் சேல் கருவிமூலம், நுகர்வோரின் வீட்டுக்கே சென்று மின்கட்டணம் வசூலிக்கப்படும். மின்வாரிய அலுவலகங்கள்,இ-சேவைமையங்கள், உள்ளிட்ட இடங்களில் மின்கட்டணம் செலுத்தி வரும் மக்களுக்கு விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் என கூறியுள்ளது.