முதலில், இந்தியாவில் சம்பளம் என்பது "வார கணக்காக" இருந்தது. அதாவது வருடத்திற்கு 52 வாரம், அதாவது 52 சம்பளம். ஆங்கிலேயர்கள் இதை 'மாத சம்பளமாக' மாற்றினார்கள். அதாவது வருடத்திற்கு 12 சம்பளம். இதை வாரக் கணக்காக மாற்றினால், 12X4= 48 வாரம், 52 வார சம்பளம் வாங்கி கொண்டு இருந்தவர்களுக்கு 48 வார சம்பளம் என்று குறைந்தது.
உடனே மகாராஷ்ட்ராவில் உள்ள "மில் தொழிலாளிகள்" தாங்கள் ஏமாற்படுவதாகவும், ஒரு மாத சம்பளம் தர படாமல் வஞ்சிக்க படுவதாகவும் கோரிக்கைகள் வைத்து 1930 ல் இருந்து 1940 வரை பத்து வருடம் போராட்டம் நடத்தி, இதை எதிர்த்தார்கள். அந்த எதிர்ப்பின் விளைவாக, ஒரு மாத சம்பளத்தை வழங்குவது குறித்து ஆங்கில அரசு, தொழிற் சங்க நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தி, இந்தியாவில் பெரும்பான்மையான மக்களால் கொண்டாடப்படும் தீபாவளி பண்டிகையின் போது, மக்களுக்கு அதிக பணம் தேவை இருக்கும் என்றும், அந்த சமயத்தில் போனஸாக வழங்கப்பட்டால் பொருத்தமாக இருக்கும் என்றும் முடிவு செய்யப்பட்டது. இவ்வாறு மீதம் இருந்த 4 வார சம்பளம்தான் "போனஸ்” ஆக மாறியது...
1940 ம் வருடம், ஜுன் மாதம் 30 ந் தேதி இந்தியாவில் முதன் முதலாக "போனஸ்" என்ற ஒன்று வழங்கப்பட்டது.
பின் நாட்களில், அது இலாப, நஷ்ட விகிதத்தை கணக்கில் எடுக்கப் பட்டு, விஸ்தரிக்கப்பட்டது.