நிவர் புயல் எதிரொலியாக சென்னையில் மெட்ரோ ரயில் சேவை 7 மணியுடன் நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது:
"காற்றின் வேகம் அதிகரித்துள்ளதால், மெட்ரோ ரயில் சேவை பகுதி 1 (வண்ணாரப்பேட்டை முதல் விமான நிலையம்) வரை 4.30 மணி முதல் 20 நிமிடங்களுக்கு ஒருமுறை இயக்கப்படும். அனைத்து மெட்ரோ ரயில் நிலையங்களிலும் கடைசி மெட்ரோ ரயில்கள் இரவு 7 மணிக்கு இயக்கப்படுகிறது. இதன்மூலம், மெட்ரோ ரயில் சேவை 8 மணிக்கு நிறைவடைகிறது. வானிலை பொறுத்தே மீண்டும் ரயில் சேவை இயக்கப்படுவது குறித்து முடிவெடுக்கப்படும்."
முன்னதாக, மெட்ரோ ரயில் சேவை இரவு 10 மணி வரை இயக்கப்படும் என மெட்ரோ நிர்வாகம் அறிவித்திருந்தது.
Source Dinamani