Type Here to Get Search Results !

தங்கம் விலையில் மீண்டும் அதிரடி மாற்றம்; இன்று காலை பவுன் ரூ400 குறைந்தது: ஒரு வாரத்தில் ரூ1792 சரிவு

தங்கம் விலை இன்று மீண்டும் சரிவை சந்தித்தது. இன்று காலை மட்டும் பவுனுக்கு ரூ.400 குறைந்தது. ஒரு வாரத்தில் மட்டும் ரூ.1792 குறைந்துள்ளது. விலை குறைந்து வருவதால் நகை வாங்க மக்கள் அதிகம் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

இதனால் நகைக்கடைகளில் கூட்டம் அதிகமாக இருந்து வருகிறது. தங்கம் விலை கடந்த 3 மாதமாக ஏற்றம், இறக்கம் நிலை காணப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கடந்த 23ம் தேதி முதல் தங்கம் விலை தொடர் சரிவை சந்தித்து வருகிறது. கடந்த 23ம் தேதி ஒரு பவுன் ரூ.37,984, 24ம் தேதி ரூ.37,120, 25ம் தேதி ரூ.36,912, 26ம் தேதி ரூ.36,904, 27ம் தேதி ரூ.36,712க்கும் விற்கப்பட்டது.


இந்த நிலையில் கடந்த சனிக்கிழமை 6வது நாளாக தங்கம் விலை சரிவை சந்தித்தது. கிராமுக்கு ரூ.15 குறைந்து ஒரு கிராம் ரூ.4,574க்கும், பவுனுக்கு ரூ.120 குறைந்து ஒரு பவுன் ரூ.36,592க்கும் விற்கப்பட்டது. தொடர்ந்து 6 நாட்களில் மட்டும் பவுன் ரூ.1,392 குறைந்தது. தொடர்ந்து தங்கம் விலை குறைந்து வந்தது  நகை வாங்குவோருக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி வந்தது. விலை குறைவால் நகை வாங்க மக்கள் அதிகம் ஆர்வம் காட்டி வருகின்றனர். இதனால், கடந்த ஒரு வாரமாக நகைக்கடைகளில் வழக்கத்தை விட அதிகமாக காணப்பட்டது.

29ம் தேதி ஞாயிற்றுக்கிழமை என்பதால் தங்கம் மார்க்கெட்டுக்கு விடுமுறை ஆகும். அதனால், நேற்று சனிக்கிழமை விலையிலேயே தங்கம் விற்பனையானது.
ஒரு நாள் விடுமுறைக்கு பிறகு தங்கம் மார்க்கெட் இன்று காலை மீண்டும் தொடங்கியது. அதில் நகை வாங்குவோருக்கு மேலும் மகிழ்ச்சியை ஏற்படுத்தும் வகையில் தங்கம் விலை கிடு,கிடுவென சரிவை சந்தித்தது.

கிராமுக்கு ரூ.50 குறைந்து ஒரு கிராம் ரூ.4,524க்கும், பவுனுக்கு ரூ.400 குறைந்து ஒரு பவுன் ரூ.36,192க்கும் விற்கப்பட்டது. தொடர்ச்சியாக ஒரு வாரத்தில் மட்டும் பவுனுக்கு தங்கம் விலை ரூ.1,792 சரிந்துள்ளது. அதே நேரத்தில் தங்கம் விலை குறைந்து பவுன் ரூ.36 ஆயிரத்தை நெருங்கி வருகிறது. இது நகை வாங்குவோருக்கு இரட்டிப்பு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


Top Post Ad

Below Post Ad