நிவர் புயல் கரையை கடந்த நிலையில், வருகிற 29-ந் தேதி புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது..
நிலப்பரப்பு வழியாக நகரும் நிவர் புயல் வலுவிழந்தது. அடுத்த 6 மணிநேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும். தற்போது புதுச்சேரியில் இருந்து 85 கி.மீ., சென்னையில் இருந்து 95 கி.மீ., தொலைவில் மையம் கொண்டுள்ளது. மேலும், புயல் காரணமாக 3 பேர் உயிரிழந்துள்ளனர்.