தென்கிழக்கு வங்கக் கடல் பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக வருகிற 23 ஆம் தேதி 6 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழையும், 24 ஆம் தேதி 8 மாவட்டங்களில் கன முதல் மிக கனமழையும் பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
வருகிற 21 மற்றும் 22 ஆம் தேதிகளில் ராமநாதபுரம், தூத்துக்குடி, சிவகங்கை, புதுக்கோட்டை மாவட்டங்களில் மிதமான மழையும் பெய்யக்கூடும் என வானிலை மையம் குறிப்பிட்டுள்ளது.
வங்க கடலில் நவம்பர் 23ஆம் தேதி புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது
தென்மேற்கு வங்க கடலில் உருவாகும் காற்றழுத்த தாழ்வு பகுதி, தாழ்வு மண்டலமாக மாறும்.
அரபிக்கடல், வங்கக்கடல் பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம்: வானிலை ஆய்வு மையம்.
23ம் தேதி நாகை, தஞ்சை, திருவாரூர், சிவகங்கை, கனமழை பெய்யக்கூடும்.
ராமநாதபுரம், புதுக்கோட்டையிலும் கனமழை பெய்ய வாய்ப்பு.
24ம் தேதி கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், புதுக்கோட்டை சிவகங்கை மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு.