பீகார் சட்டப்பேரவை தேர்தலில் மாலை 5 மணி நிலவரப்படி 50% வாக்குகள் எண்ணப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் தகவல் தெரிவித்துள்ளது. 7 தொகுதிகளுக்கான வெற்றி என்பது நேரடியாக அறிவிக்கப்பட்டுள்ளது. 2 தொகுதிகளில் பாரதிய ஜனதா கட்சியும், 2 தொகுதிகளில் ஆர்.ஜே.டி
கட்சியும், 2 தொகுதிகளில் லோக் ஜன் தன் கட்சியும், ஒரு தொகுதியில் சுயேச்சை ஒருவரும், வெற்றி பெற்றதாக அறிவிப்பானது வெளியிடப்பட்டுள்ளது. நள்ளிரவு வரை இந்த வாக்கு எண்ணிக்கை தொடர்ந்து நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 5 மணி நிலவரப்படி நிலவரப்படி 119 தொகுதிகளுக்கும் அதிகமான இடங்களில் பாஜக கூட்டணி முன்னிலையில் உள்ளது. அதே நேரத்தில் காங்கிரஸ் கூட்டணி 114 தொகுதிகளுக்கும் அதிகமான இடங்களில் முன்னிலையில் உள்ளது. பெரும்பான்மைக்கு தேவையான 122 இடங்களைப் பெற இரு கூட்டணிகளும் இடையே கடும் போட்டி நிலவி வருகிறது. இதனிடையே பீகார் சட்டப்பேரவை தேர்தலில் மாலை 5 மணி நிலவரப்படி 55% வாக்குகள் எண்ணப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் தகவல் தெரிவித்துள்ளது. கொரோனா தடுப்பு விதிகளின் படி வாக்கு எண்ணிக்கை மையங்கள் 63% அதிகரிப்பால் முடிவு வெளியாவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாகவும் விளக்கம் அளித்துள்ளது. பல்வேறு மையங்களில் இருந்து வரும் தகவல்களை தொகுத்து சரிபார்க்க வேண்டியிருப்பதால் முடிவு அறிவிப்பதில் தாமதம் ஏற்படும். 80 வயதுக்கு மேற்பட்டவர்கள் தபாலில் வாக்கு செலுத்தியதால், தபால் வாக்குகள் எண்ணுவதிலும் தாமதம் ஏற்பட்டுள்ளது எனவும் கூறியுள்ளது.Source Dinakaran