பாலாஜி மோகன் இயக்கத்தில் தனுஷ், சாய் பல்லவி உள்ளிட்டோர் நடித்த மாரி 2 படத்தில் வந்த ரவுடி பேபி பாடல் வீடியோ கடந்த ஆண்டு ஜனவரி மாதம் 2ம் தேதி வெளியிடப்பட்டது. யுவன் ஷங்கர் ராஜா இசையில் தனுஷ், தீ பாடிய அந்த பாடலுக்கு பிரபுதேவா கொரியோகிராஃப் செய்திருந்தார்.பிரபுதேவாவின் வித்தியாசமான ஸ்டெப்ஸுகளை தனுஷ், சாய் பல்லவி போட்டிருந்தனர்.
ரவுடி பேபி பாடலின் இசையோடு சேர்ந்து நடனமும் ரசிகர்களை கவர்ந்தது. இந்நிலையில் ரவுடி பேபி பாடலுக்கு யூடியூபில் 100 கோடி வியூஸ் கிடைத்துள்ளது. 100 கோடி வியூஸ் பெற்ற முதல் தென்னிந்திய பாடல் வீடியோ என்கிற பெருமையை பெற்றுள்ளது ரவுடி பேபி.