சென்னை அணியின் கேப்டன் மகேந்திரசிங் தோனிக்கு நேற்று நடந்த ஐபிஎல் போட்டி அவரது 200வது போட்டியாகும். ஐபிஎல் போட்டியில் 200 போட்டிகள் விளையாடிய முதல் வீரர் என்ற பெருமையை தோனி படைத்துள்ளார்.
இந்நிலையில், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் வீரர் ஜோஸ் பட்லர் மகேந்திர சிங் தோனியின் சீருடையை கையில் ஏந்தியவாறு எடுத்துக் கொண்ட புகைப்படம் இணையதளத்தில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது. தோனி தனது 200 ஆவது ஐபிஎல் போட்டியில் உடுத்திய சீருடை என்பதன் நினைவாக, அவரது ரசிகரான பட்லர் அதை பெற்றுக் கொண்டார் என்ற தகவல்களுடன் இந்த புகைப்படம் பகிரப்பட்டு வருகிறது.