Type Here to Get Search Results !

''ரூபாய் நோட்டுகள் மூலம் கரோனா தொற்றுப் பரவும்''


 கரோனா   வைரஸ்கள் ரூபாய் நோட்டுகள் மூலம் பரவும் என்பதை ரிசர்வ் வங்கி உறுதி செய்திருப்பதாக அனைத்திந்திய வர்த்தகக் கழகம் தெரிவித்துள்ளது.

 கடந்த மார்ச் 9-ம் தேதி மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு அனைத்திந்திய வர்த்தகக் கழகம் எழுதிய கடிதத்தில், ரூபாய் நோட்டுகள் வாயிலாக கரோனா வைரஸ் உள்பட பாக்டீரியாக்கள், வைரஸ்கள் பரவுமா என்று கேள்வி எழுப்பியிருந்தது.
 இந்தக் கடிதத்தை மத்திய நிதியமைச்சகம் இந்திய ரிசர்வ் வங்கிக்கு அனுப்பி வைத்திருந்தது. 

இதற்கு இந்திய ரிசர்வ் வங்கி அளித்திருக்கும் பதிலில், ரூபாய் நோட்டுகள் மூலம் கரோனா வைரஸ் உள்பட பாக்டீரியாக்கள், வைரஸ்கள் பரவும் வாய்ப்பு உள்ளது. எனவே, கரோனா தொற்றுப் பரவலைத் தடுக்கும் வகையில், முடிந்த அளவுக்கு டிஜிட்டல் பணப்பரிவர்த்தனையை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டு வருவதாகவும் தெரிவித்திருப்பதாக அனைத்திந்திய வர்த்தகக் கழகம் கூறியுள்ளது.
 மேலும், பொதுமக்கள் அவசியமின்றி வங்கிக் கணக்குகளில் இருந்து பணத்தை எடுக்க வேண்டாம் என்றும், பல்வேறு ஆன்லைன் வசதிகள் மூலம் பணப்பரிமாற்றத்தை மேற்கொள்ளலாம் என்றும் இந்திய ரிசர்வ் வங்கி அறிவுறுத்தியிருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.   
 Source Dinamani

Top Post Ad

Below Post Ad