தென்கிழக்கு ரெயில்வே ரெயிலில் பயணம் செய்யும் பெண் பயணிகளின் பாதுகாப்பை, அவர்கள் ஏறும் இடத்தில் இருந்து இறங்கும் இடம் வரை உறுதி செய்யும் வகையில் ‘எனது தோழி’ என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தியது மேலும், பயணத்தின்போது ஏதாவது பிரச்சனை ஏற்பட்டால் 182 எண்ணில் பெண்கள் புகார் அளிக்கலாம் எனத் தெரிவித்திருந்தது.இதற்கு பெண் பயணிகள் இடையே நல்ல வரவேற்பு கிடைத்தது. இதனைத் தொடர்ந்து எல்லா இடங்களிலும் ‘எனது தோழி’ திட்டம் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளதாக இந்திய ரெயில்வே தெரிவித்துள்ளது.
Source Malaimalar