Type Here to Get Search Results !

மெரினா கடற்கரையில் மக்களுக்கு எப்போது அனுமதி?: சென்னை மாநகராட்சி விளக்கம்


தமிழகத்தில் பல கட்டங்களாக பல்வேறு வகையான தளர்வுகளுடன் ஊரடங்குகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. தியேட்டர்கள் மற்றும் மெரினா கடற்கரை உள்ளிட்ட சில இடங்கள் மக்களின் பயன்பாட்டுக்கு வராமல் உள்ளன.

இந்த நிலையில், மெரினா கடற்கரையில் மக்களை அனுமதிப்பது தொடர்பான வழக்கில் உயர்நீதிமன்றத்தில் பதிலளித்துள்ள சென்னை மாநகராட்சி,
“பொதுமுடக்கம் தமிழகத்தி்ல நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், அக்டோபர் 31ஆம் தேதி வரை மெரினா கடற்கரையில் பொதுமக்களுக்கு அனுமதி இல்லை” என்று தெரிவித்துள்ளது.

மேலும், மெரினாவில் உள்ள தள்ளுவண்டி கடைகளுக்கான டெண்டர் திறப்பு நவம்பர் 9 ஆம் தேதி திறக்கப்படுகிறது என்றும் மாநகராட்சி அறிவித்துள்ளது. டெண்டர் திறப்பு குறித்து நவம்பர் 11ஆம் தேதிக்குள் பதிலளிக்க சென்னை மாநகராட்சிக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

Top Post Ad

Below Post Ad