உயரமாக இடத்தில் அமைக்கப்பட்ட உலகின் நீளமான நெடுஞ்சாலை சுரங்கப்பாதையை பிரதமர் மோடி நேற்று நாட்டுக்கு அர்ப்பணித்தார்.
* வாஜ்பாய் பிரதமராக இருந்த போது 2002-ல் இத்திட்டத்திற்கு அடிக்கல்.
* மணாலியிலிருந்து 25 கி.மீ. தூரத்திற்கு சுரங்கப்பாதையின் தென்பகுதி தொடங்குகிறது.
*இதற்கு 2019- டிச.26-ல் அடல்பிகாரி வாஜ்பாய் நினைவாக அவரது பெயர் சூட்டப்பட்டது.
*கடல் மட்டத்திலிருந்து சுரங்கத்தின் தென்பகுதி உயரம் 10,039 அடி, வடபகுதி உயர் 10,075 அடி.
*இதனை எல்லை சாலை கழகம் அமைத்தது.
*இரு வழிச்சாலையான இதில் நாள் ஒன்றுக்கு 3 ஆயிரம் கார்கள், 1500 லாரிகள் செல்லலாம்.
*மணாலியில் இருந்து அடல் சுரங்கப்பாதை வழியாக லடாக்கின் மேல பகுதிக்கு செல்வதற்கு தூரம் 428 கி.மீ., பழைய தூரம் 474 கி..மீ., பயண நேரம் 4-5 மணி நேரம் குறைகிறது.
*குளிர்காலத்தில் பணி மூடுவதால் ஆறு மாதம் சாலை மூடப்பட்டிருக்கும். தற்போது பிரச்னை இல்லை.
*சுரங்கப்பாதையில் முதல் 400 மற்றும் கடைசி 400 மீட்டர் தூரத்திற்கு அனுமதிக்கப்பட்ட வேகம் மணிக்கு 40 கி.மீ., மற்ற பகுதிகளில் மணிக்கு 80 கி.மீ., வேகத்தில் செல்லலாம்.
* சுரங்கப்பாதையில் வாகனத்தை முந்தி செல்வது தடை செய்யப்பட்டுள்ளது.
இதற்கு முன் தஜிகிஸ்தானில் 11,063 அடி உயரத்தில் அமைக்கப்பட்டிருந்த அன்ஜோப் குகை சாலை 5 கி.மீ., நீளமானதாக இருந்தது.
ஒவ்வொரு கி.மீ. தூரத்திற்கும் காற்றின் தரம் சோதிக்கப்படும்.
150 மீட்டருக்கு தொலை பேசி வசதி.
60 மீட்டருக்கு தீ தடுப்பு கருவி.
250 மீட்டருக்கு தானியங்கி சி.சி.டி.வி. கேமரா.
500 மீட்டர் தூரத்தி்றகு அவசார கால வெளியேறும் பாதை.
சாலைக்கு கீழ் வடிகால் வசதி.