மாதவிடாயை தள்ளிப்போட அடிக்கடி மாத்திரை எடுப்பவர்களுக்கு சுழற்சியில் பாதிப்பு ஏற்பட்டு அடுத்து வரும் மாதவிடாயில் உதிரப்போக்கு அளவிற்கு அதிகமான அல்லது மிக குறைவாக இருக்க வாய்ப்புள்ளது.
இவர்களுக்கு உடலில் வேறு சில உபாதைகள் ஏற்படவும் வாய்ப்புள்ளதாக மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். இது போன்ற மாத்திரைகள் எல்லோருக்கு ஏற்புடையது அல்ல என்பதால், மருத்துவர்களின் அறிவுரை இன்றி எடுக்க வேண்டாம்.