❖ சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு தேவையான பொருட்களுடன் நாசாவின் கல்பனா சாவ்லா விண்கலம் அன்டரேஸ் ராக்கெட் மூலம் விண்ணில் செலுத்தப்பட்டது.
❖ விண்வெளியில் அமைந்துள்ள சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு பொருட்களை கொண்டு செல்வதற்காக அமெரிக்காவின் விண்வெளி ஆராய்ச்சி மையமான நாசா சார்பில் விண்கலங்கள் அனுப்பப்படுகின்றன.
❖ அமெரிக்காவின் நார்த்ரூப் கிரம்மான் நிறுவனத்தின் சிக்னஸ் விண்கலத்தை அனுப்ப ஏற்பாடு செய்யப்பட்டது. இந்தியாவில் பிறந்த நாசா விண்வெளி வீராங்கனையான கல்பனா சாவ்லாவின் பெயர் சூட்டப்பட்டது.