Type Here to Get Search Results !

சவால் நிறைந்த காலகட்டம் தொடங்குகிறது - அமைச்சர் விஜயபாஸ்கர் பேட்டி

கேரளாவில் பல்வேறு கட்டங்களாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட நிலையிலும், தற்போது அங்கு தொற்று எண்ணிக்கை வேகமாக உயர்ந்து வருகிறது. நேற்று ஒரே நாளில் 11 ஆயிரத்து 755 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 2 லட்சத்து 77 ஆயிரத்து 855 ஆக அதிகரித்துள்ளது. இந்நிலையில், தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் செய்தியாளர்களை சந்தித்த போது, கேரளாவில் கொரோனா பரவல் அதிகரிப்பது தமிழகத்திற்கு பெரும் சவாலாக உள்ளதாக தெரிவித்தார். வெளி மாநிலங்களில் இருந்து வரும் நபர்கள்  கண்காணிப்பு மற்றும் பரிசோதனைக்குப் பிறகே அனுமதிக்கப்படுவதாக அவர் கூறினார். மேலும், “கொரோனா பரவல் அதிகரித்தருப்பதால் தமிழக எல்லையோர மாவட்டங்கள் தீவிரமாக கண்காணிக்கப்படுகின்றன. மழைக்காலம் மற்றும் பண்டிகைக் காலம் தொடங்குவதால் சவால் நிறைந்த காலகட்டமும் தொடங்குகிறது” என்று அவர் கூறினார்.
Source Dinathanthi
Tags

Top Post Ad

Below Post Ad