‘ப்ளு மூன்’ என்ற நீல நிலவு இன்று இரவு தோன்றும் என்று விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். இரவு 8 மணிக்கு மேல் இந்த நிலவை பார்க்கலாம். வானில் ஏற்படும் அரிய நிகழ்வான ‘ப்ளூ மூன்’ எனப்படும் நீல நிலவு இன்று தோன்ற உள்ளது. 2020ம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் இரண்டு முழு நிலவு வருகிறது. இந்த இரண்டில் இரண்டாவதாக வரும் நிலவுக்கு நீல நிலவு என்று அழைக்கப்படுகிறது. ஆனால் இந்த நிலவு நீல நிறத்தில் தோன்றாது. இந்தியாவில் இன்று இரவு 8 மணிக்கு மேல் இந்த நிலவை பார்க்கலாம். அக். 1ம் தேதி ஒரு முழு நிலவு வந்தது, அதன் பின் அக். 31ம் தேதி (இன்று) வருகிறது.
இதற்கு காரணம், நிலவினுடைய சுழற்சி முறை. நிலவினுடைய சுழற்சி காலம் 29.5 நாட்கள். ஒவ்வொரு 29.5 நாட்களுக்கு ஒருமுறை சூரியன் - பூமி - நிலா ஒரே நேர் கோட்டில் வந்து கொண்டே இருக்கும். அதன்படி, ஒவ்வொரு மாதத்திற்கும் ஒருமுறை முழு நிலவு தோன்றும். வருடத்திற்கு 12 முறை முழு நிலவைப் பார்க்கலாம். நிலவின் சுழற்சி கால அடிப்படையில் பார்த்தால், ஒரு வருடத்தின் 12 சுழற்சிக்குப் பின்னர் 11 நாட்கள் மீதமிருக்கும். இந்த மீதமிருக்கும் நாட்கள் சேர்ந்து ஒவ்வொரு 2.7 ஆண்டுகளுக்கு ஒரு முறை இந்த நீல நிலவு நிகழ்வு நடைபெறும். அதுவும் 31 நாட்கள் உள்ள மாதங்களில் நடைபெறும்.
அதாவது 19 ஆண்டுகளுக்குள் 7 முறை இந்த நிகழ்வு நடைபெறும். கடைசியாக 2018ம் ஆண்டு மார்ச் 31 அன்று நீல நிலவு நிகழ்வு நடைபெற்றது. இதற்குகு முன்னர் 2018ம் ஆண்டு ஜனவரி 31்ம் தேதி இந்த நிகழ்வு நடந்தது. இதற்கு முன்னர் 2015ம் ஆண்டு ஜூலை 31 நடைபெற்றது. அடுத்து 2021ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் இது தோன்றும் என்று விண்வெளி ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
Source Tamil Murasu