அக்டோபர் 5-ம் தேதி முதல், அரசு ஊழியர்கள் புறநகர் ரயில்களில் பயணிக்கலாம் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
இது குறித்து தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்,
சென்னையில் வருகிற 5 ஆம் தேதி முதல் அத்தியாவசியப் பணியாளர்களுக்கு மட்டும் ரயில் சேவை இயக்கப்படும்.
அத்தியாவசியப் பணியாளர்கள் என்று மாநில அரசு அங்கீகரித்துள்ள நபர்கள் மட்டுமே இந்த ரயிலில் பயணிக்க முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்தியாவசியப் பணியாளர்களுக்காக குறைந்த அளவில் புறநகர் ரயில்களை இயக்க தெற்கு ரயில்வே முடிவு செய்துள்ளது. பயண அனுமதிக்கான அடையாள அட்டை இருந்தால்தான், ரயில் நிலையத்துக்குள்ளேயே அனுமதிக்கப்படுவார்கள்.
சமூக இடைவெளி, முக கவசம் உள்ளிட்ட பாதுகாப்பு வழிமுறைகளை கடைபிடிக்க வேண்டும்.இவ்வாறு தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.
இந்த ரயிலில் பயணம் செய்ய தமிழக அரசில் பணிபுரியும் அனுமதி அளிக்கப்பட்டு அவர்களுக்கான சிறப்பு ரயிலாக இது இயங்கும். பயணம் செய்ய வரும் அத்தியாவசிய பணியாளர்கள் அவர்கள் பணிபுரியும் அலுவலகத்தில் தொடர்பு அலுவலர்கள் அளிக்கும் அவர்களின் முழு விபரங்கள் அடங்கிய அடையாள அட்டையை பயன்படுத்தலாம்.
அரசு அளித்த ஒரிஜினல் அடையாள அட்டையை எடுத்து வரவேண்டும். அவர்கள் யார் எந்த துறை பெயர் உள்ளிட்ட விவரங்கள் கூடிய அனுமதி அட்டையாக அது இருக்கவேண்டும். ரயில் நிலையத்துக்குள் வரும் பயணிகளுக்கு இரண்டு இடங்களில் பரிசோதனைகள் செய்யப்படும். முதல் வகை பரிசோதனை ரயில்வே போலீஸ், ரயில்வே பாதுக்காப்புப் படை போலீஸார் ரயில் நிலைய வாயிலில் அடையாள அட்டையை சோதித்து அனுமதிப்பார்கள்.
இரண்டாவது பரிசோதனை ரயில்வே பிளாட்பாரத்தில் டிக்கெட் பரிசோதகரால் நடத்தப்படும். உள்ளே வரும் பயணிகளுக்கு சானிடைசர் உள்ளிட்ட அரசின் பாதுகாப்பு நடைமுறைகள் செய்யப்பட்டுள்ளது.
ரயிலில் பயணம் செய்யும் பயணிகள் முக கவசம், சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும்.
பயணிகளின் உடல் பரிசோதனை உடல் வெப்ப பரிசோதனையும் நுழையும் பொழுதே பரிசோதிக்கப்படும். ஒரு வழிப்பாதைக்கான டிக்கெட்டுகள் மட்டுமே டிக்கெட் கவுண்டரில் வழங்கப்படும்.
அத்தியாவசிய பணிகளுக்கு அந்த பணியாளர்கள் அவர்களுடைய அலுவலகம் சம்பந்தப்பட்ட தொடர்பு அதிகாரியிடம் அடையாள அட்டையைப் பெற்று அதை காட்டி காண்பித்து பயணம் செய்யலாம்.
சீசன் டிக்கெட், பயண டிக்கெட்டை ஸ்டேஷனில் உள்ள டிக்கெட் கவுண்டரில் பெற்றுக்கொள்ளலாம். தங்கள் அடையாள அட்டையை காண்பித்து டிக்கெட் வாங்கிக்கொள்ளலாம்.
ஏற்கெனவே சீசன் டிக்கெட் வைத்து இருந்தவர்கள் அந்த சீசன் டிக்கெட்டில் உள்ள எஞ்சிய நாட்களுக்கான பயணத்தை தொடரலாம். ஒரு நிலையத்தில் ஒரு கவுண்டர் மட்டுமே இயங்கும் இது பீக் அவரில் டிக்கெட் மட்டும் அளிக்கவும் மற்ற நேரங்களில் சீசன் டிக்கெட் வழங்கவும் பயன்படும்.
முக்கிய குறிப்பு:
* அத்தியாவசிய பணியாளர்களுக்கு மட்டுமே டிக்கெட் விநியோகிக்கப்படும்.
* பொதுமக்களுக்கு டிக்கெட் கிடையாது, அனுமதி கிடையாது.
* ரயில் நிலையத்திற்குள் நுழையும் பயணிகள் உடல் வெப்ப பரிசோதனை செய்த பின்னரே அனுமதிக்கப்படுவார்கள்.
* ரயில்வே பாதுகாப்பு படை, ரயில்வே போலீஸ், தமிழக அரசின் காவல்துறை ஒவ்வொரு ஸ்டேஷனிலும் பாதுகாப்பு பணிகளை மேற்கொள்வார்கள். அவர்கள் பயணிகளின் அடையாள அட்டையை சோதித்து உள்ளே அனுப்புவார்கள்.
* ரயிலில் பயணம் செய்யும் பயணிகள் அரசின் உரிய பாதுகாப்பு வழிமுறைகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும்.
* அனைத்து பயணிகளும் முககவசம், சமூக இடைவெளியுடன் அரசு வழிகாட்டு நெறிமுறைகளை கடைபிடிக்க வேண்டும்”.
இவ்வாறு அறிவித்துள்ளது.