முத்துராமலிங்கத் தேவர்
(அக்டோபர் 30, 1908 – அக்டோபர் 30, 1963) ஆன்மிகவாதியாகவும், சாதி பாகுபாட்டை எதிர்ப்பவராகவும், சுதந்திரப் போராட்டத் தியாகியாகவும் விளங்கியவர்.
.
நேதாஜி சுபாஷ் சந்திர போசின் தலைமையில் பிரித்தானிய அரசை எதிர்த்த இந்திய தேசிய இராணுவத்திற்கு, தமிழகத்திலிருந்து பெரும் படையைத் திரட்டி அனுப்பிய பெருமை இவரைச் சாரும்.
தலைசிறந்த பேச்சாளராகவும், ஆன்மீகவாதியாகவும் திகழ்ந்த இவரது பிறந்த நாளை அரசு விழாவாக, தமிழக அரசு பசும்பொன்னில் வருடந்தோறும் கொண்டாடி வருகின்றது.
பசும்பொன்னில் மூன்று நாட்கள் கோலாகலமாக நடக்கும் தேவர் குருபூஜை விழாவில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும், லட்சக்கணக்கான மக்கள் கலந்து கொண்டு பால்குடம் எடுத்தல், அலகு குத்துதல், முளைப்பாரி செலுத்துதல், முடிக்காணிக்கை செலுத்துதல், பொங்கல் வைத்தல், தீச்சட்டி செலுத்துதல், அபிஷேகம் செய்தல் ஆகிய செயல்களின் மூலம் இவரை வணங்குகின்றனர்.
மேலும் பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்களும், தமிழக அமைச்சர்களும் வருடம்தோறும் கலந்துகொண்டு வணங்குகின்றனர்.
2014ஆம் ஆண்டு தேவர் சிலைக்கு தங்க கவசம் ஒன்றை பரிசாக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வழங்கினார்.
இது மதுரை அண்ணா நகரில் உள்ள வங்கியின் பெட்டகத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது.
ஆண்டுதோறும் தேவர் ஜெயந்திக்கு முன்பாக வங்கியில் இருந்து எடுக்கப்படும். அப்போது நினைவிட பொறுப்பாளர்கள் கையொப்பமிட்டு பெற்றுச் சென்று தங்ககவசம் அணிவித்து வழிபடுவர்.
2020 அக்டோபர் 30ஆம் தேதி முத்துராமலிங்கத் தேவரின் 113வது ஜெயந்தியும் 58வது குருபூஜையும் நடைபெறகிறது.
பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர்க்கு இந்திய அஞ்சல் துறையினர்
30 அக்டோபர் 1995 ஆண்டு 100 பைசா மதிப்பில் அஞ்சல் தலை வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
தகவல்: விஜயகுமார், திருச்சி