கடந்த செப்டம்பர் 30ஆம் தேதி அக்டோபர் மாதத்திற்கான பொதுமுடக்கத் தளர்வுகள் மற்றும் வழிகாட்டு நெறிமுறைகள் அறிவிக்கப்பட்டது. தற்போது அக்டோபர் மாதம் நிறைவடையவுள்ள நிலையில், நவம்பர் மாதத்திற்கான தளர்வுகள் குறித்த அறிவிப்பை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. அதன்படி வரும் நவம்பர் 30ஆம் தேதி வரை நோய் கட்டுப்பாட்டுப் பகுதிகளில் ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தவிர பிற பகுதிகளில் பொருளாதார நடவடிக்கைகள் மற்றும் பொதுமுடக்கத் தளர்வுகள் குறித்து செப்டம்பர் மாதத்திற்காக மத்திய அரசு வெளியிட்ட அறிவிப்புகள் எந்த மாற்றமும் இன்று நவம்பர் 30 வரை தொடரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சர்வதேச விமான போக்குவரத்து ஏற்கனவே தடை செய்யப்பட்டுள்ள நிலையில், மத்திய உள்துறை அமைச்சகத்தால் அனுமதிக்கப்பட்ட விமானங்களைத் தவிர மற்ற விமானங்களுக்கான தடை தொடரும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. திரையரங்குகள் 50 சதவீத இருக்கைகளுடன் செயல்படலாம் என்றும் நீச்சல் குளங்கள், விளையாட்டு மைதானங்கள் உள்ளிட்டவை விளையாட்டு வீரர்களின் பயிற்சிகளுக்காக மட்டும் திறக்கப்படலாம் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
Source Dinathanthi