தமிழ்நாட்டில், கொரோனாவால் முதல் உயிரிழப்பு நிகழ்ந்த 198 நாட்களுக்குப் பின்னர் இன்று கொரோனா உயிரிழப்புகள் 10 ஆயிரத்தைக் கடந்திருக்கிறது.
இந்தியாவில் மகாராஷ்டிரா மாநிலத்தையடுத்து, கொரோனா உயிரிழப்புகள் தமிழகத்தில் தான் 10 ஆயிரத்தைக் கடந்திருக்கிறது.
ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களில் தமிழகத்தை விட தொற்று பாதிப்புகள் அதிகம் என்ற போதிலும், உயிரிழப்புகள் தமிழகத்திலேயே அதிகம்.
மார்ச் 25ம் தேதி - முதல் உயிரிழப்பு
1 – 1000 உயிரிழப்புகள் -94 நாட்கள்
1001 – 2000 உயிரிழப்புகள்-17 நாட்கள்
2001 – 3000 உயிரிழப்புகள்-10 நாட்கள்
3001 – 4000 உயிரிழப்புகள்-9 நாட்கள்
4001 – 5000 உயிரிழப்புகள்-9 நாட்கள்
5001 – 6000 உயிரிழப்புகள்-8 நாட்கள்
6001 – 7000 உயிரிழப்புகள்-10 நாட்கள்
7001 – 8000 உயிரிழப்புகள்-10 நாட்கள்
8001 – 9000 உயிரிழப்புகள்-14 நாட்கள்
9001 – 10000 உயிரிழப்புகள்-17 நாட்கள்