மின்னணு முறையில் மெட்ரோ ரயில் டிக்கெட் பெறும் பயணிகளை ஊக்குவிக்கும் விதமாக சென்னை மெட்ரோ ரயில், கட்டணத்தில் சலுகை அறிவித்துள்ளதுஇதன்படி ‛QR code டிக்கெட் மூலமாக பயணம் செய்யும் பயணிகளுக்கு கட்டணத்திலிருந்து 20 சதவீதம் விலக்கு அளிக்கப்படும் என் சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவித்துள்ளது. கொரோனா பரவல் காலத்தில் பயணிகளிடம் பாதுகாப்பு நடவடிக்கையை ஊக்குவிக்கவும், டிக்கெட்டிற்காக வரிசையில் நிற்பதை தவிர்க்கவும் இந்த சலுகை அளிக்கப்படுவதாக மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
பயணிகள் தங்களது ஸ்மார்ட் போன்களில் CMRL செயலியை பதிவிறக்கம் செய்து அதில் QR தொழில்நுட்பத்தின் மூலம் தங்களது டிக்கெட்டுகளை பதிவு செய்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இது ஒருவழி பயணம் அல்லது இருவழி பயணம் இரண்டிற்கும் பொருந்தும்.. இந்நடைமுறை செப்., 11 முதல் வந்துள்ளது.