தமிழகத்தில் 11 செய்யப்பட்டுள்ளனர். இதற்கான உத்தரவை தமிழக தலைமைச் செயலாளர் சண்முகம் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
இதுகுறித்த அவரது உத்தரவு வருமாறு:
1. விடுமுறையிலிருந்து திரும்பியுள்ள நில நிர்வாகத்துறை கூடுதல் ஆணையர் மகேஷ்வரி மனித உரிமை ஆணையச் செயலாளராக மாற்றப்பட்டுள்ளார்.
2. உயர் கல்வித்துறை கூடுதல் செயலர் லில்லி நிலச் சீர்த்திருத்தத்துறை இயக்குனராக மாற்றப்பட்டுள்ளார்.
3. கூட்டுறவுத்துறை மேலாண் இயக்குனர் வெங்கடேஷ் பொதுப்பணித்துறைச் சிறப்புச் செயலராக மாற்றப்பட்டுள்ளார்.
4. திருச்செந்தூர் சுப்ரமணியம் சுவாமி கோயில் நிர்வாக அலுவலர் அம்ரித் பொது துறை(சட்டம்- ஒழுங்கு)துணைச் செயலராக மாற்றப்பட்டுள்ளார்.
5. பொது துறை(சட்டம்- ஒழுங்கு)துணைச் செயலர் நாரணவாரே மணீஷ் சங்கர்ராவ் வணிகவரித்துறை (அமலாக்கம்) இணை ஆணையராக மாற்றப்பட்டுள்ளார்.
6. வணிகவரித்துறை (அமலாக்கம்) இணை ஆணையர் லக்ஷ்மி பிரியா வணிக வரித்துறை (நிர்வாகம்) கூடுதல் ஆணையராக மாற்றப்பட்டுள்ளார்.
7. நிதித்துறை சிறப்புச் செயலர் ஆனந்தகுமார் சர்க்கரை ஆணையராக மாற்றப்பட்டுள்ளார். இவர் தமிழ் நாடு சர்க்கரைக் கழக மேலாண் இயக்குனராகவும் செயல்படுகிறார்.
8. சர்க்கரை ஆணையர் மற்றும் தமிழ் நாடு சர்க்கரைக் கழக மேலாண் இயக்குனர் ரீட்டா ஹரீஷ் தாக்கர் அரசு நிதித்துறைச் சிறப்புச் செயலாராக மாற்றப்பட்டுள்ளார்.
9. விடுப்பிலிருந்து பணிக்கு திரும்பிய மனித உரிமை ஆணையச் செயலர் ஷோபானா தமிழ்நாடு கைவினைப்பொருட்கள் வளர்ச்சிக்கழக மேலாண் இயக்குனராக மாற்றப்பட்டுள்ளார்.
10. பொதுப்பணித்துறை சிறப்புச் செயலர் மைதிலி .கே.ராஜேந்திரன் கூட்டுறவுத்துறை மேலாண் இயக்குனராக மாற்றப்பட்டுள்ளார்.
11. வழிகாட்டுதல் துறை நிர்வாக இயக்குனர் அனீஷ் சேகர் மாநில தொழில் வளர்ச்சிக் கழக (சிப்காட்) நிர்வாக இயக்குனராக மாற்றப்பட்டுள்ளார்.
இவ்வாறு சண்முகம் உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.