13-வது ஐபிஎல் தொடர் வருகிற 19-ந் தேதி ஐக்கிய அரபு அமீரகத்தில் தொடங்குகிறது. இந்நிலையில், ஐபில் போட்டிக்கான அதிகாரபூர்வ அட்டவணை வெளியாகியுள்ளது. இதன் முதல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் - சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதுகின்றன. போட்டிகள் துபாய், அபுதாபி, ஷார்ஜா ஆகிய 3 மைதானங்களில், மதியம் 3.30 மணிக்கும், இரவு 7.30 மணிக்கும் நடைபெறுகிறது.