Type Here to Get Search Results !

புறநகர் மின்சார ரயில்களை இயக்க பயணிகள் கோரிக்கை


சென்னையில் முக்கிய போக்குவரத்துகளாக புறநகர் மின்சார ரயில் சேவைகள் உள்ளது. சென்னை கடற்கரையில் இருந்து எழும்பூர், நுங்கம்பாக்கம், கிண்டி, தாம்பரம் வழியாக செங்கல்பட்டுக்கும், மூர்மார்க்கெட்டில் இருந்து கும்மிடிப்பூண்டி, பட்டாபிராம், ஆவடி, அரக்கோணத்திற்கும், சென்னை கடற்கரையில் இருந்து பறக்கும் ரயில் மயிலாப்பூர், பெருங்குடி, தரமணி வழியாக வேளச்சேரிக்கு என தினம்  மின்சார ரயில்கள் இயக்கப்படுகிறது. ரயில்களில் டிக்கெட் கட்டணம் குறைவு என்பதாலும், போக்குவரத்து இடையூறின்றி பள்ளி, கல்லூரிகள், அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் வேலை செய்பவர்கள் என தினம் 10 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் புறநகர் மின்சார ரயில்கள் மற்றும் பறக்கும் ரயில் சேவையை பயன்படுத்தி வருகின்றனர். 
இந்நிலையில் ஊரடங்கு காரணமாக கடந்த 169 நாட்களாக மின்சார ரயில்கள் இயக்கப்படாததால் பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகின்றனர். 

மேலும் பள்ளி, கல்லூரிகள் தவிர அரசு மற்றும் தனியார் அலுவலகங்கள், தொழிற்சாலைகள் அனைத்தும் 100 சதவீதம் ஊழியர்களுடன் இயங்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் ேவலை செய்பவர்களில் 50 சதவீதத்திற்கும் அதிகமான ஊழியர்கள் தாம்பரம், மறைமலைநகர், கூடுவாஞ்சேரி, செங்கல்பட்டு போன்ற பகுதிகளில் இருந்து தான் தினமும் வேலைக்கு வருகின்றனர். அதனால் அவர்களால் பேருந்து மற்றும் இருசக்கரவாகனத்தில் தினமும் அலுவலகத்திற்கு வந்து செல்வது என்பது மிகவும் சிரமாக உள்ளது. அதைப்போன்று தினம் கூலி வேலைக்கு செல்பவர்கள் பேருந்து கட்டணமாக ஒரு நாளைக்கு ரூ.50க்கு மேல் செலவாகிறது. 
எனவே புறநகர் மின்சார ரயில்களை இயக்க வேண்டும் என்று தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகின்றனர். 

இந்நிலையில் இந்த மாதம் 15ம் தேதி அல்லது இம்மாத இறுதிக்குள் மின்சார ரயில்களை இயக்க அதிக வாய்ப்புள்ளது என்று கூறப்படுகிறது. மேலும் இது குறித்து ரயில்வே அதிகாரிகள் கூறியதாவது: சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் முக்கிய போக்குவரத்து சேவையாக உள்ளது. தற்போது சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவதால் மின்சார ரயில்களை இயக்க வேண்டும் என்று பயணிகள் தொடர்ந்து கோரிக்ைக வைக்கின்றனர். இதையடுத்து தெற்கு ரயில்வே ஆலோசனை நடத்தி வருகிறது. 
மேலும், மின்சார ரயில் சேவை மீண்டும் தொடங்குவதற்கு ஒப்புதல் அளிக்க ரயில்வே வாரியத்துக்கு கோரிக்கை கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. ரயில்வே வாரிய அனுமதி கிடைத்த பிறகு விரைவில் மின்சார ரயில் சேவை மீண்டும் தொடங்கும். இன்னும் ஓரிரு நாளில் இதற்கான பதில் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதையடுத்து, முதல்கட்டமாக குறைந்த அளவில் மின்சார ரயில்களை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. ஏற்கெனவே, மின்சார ரயில்களில் தூய்மை மற்றும் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு தயாராக உள்ளது. ரயில்வே நிர்வாகத்தின் அனுமதி கிடைத்தவுடன் உடனடியாக மின்சார ரயில்கள் இயக்கப்படும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
Source Tamil Murasu

Top Post Ad

Below Post Ad