Type Here to Get Search Results !

தமிழகம் முழுவதும் நியாயவிலைக் கடை பணியாளர் சங்கத்தினர் இன்று அடையாள வேலை நிறுத்தம்


தமிழ்நாடு அரசு நியாய விலைக்கடை பணியாளர்கள் சங்கத்தினர் இன்று தமிழகம் முழுவதும் மாவட்ட பதிவாளர் அலுவலகங்கள் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தவிருக்கிறார்கள். மேலும், கோரிக்கைகளை வலியுறுத்தி அடையாள வேலை நிறுத்தம் எனவும் அறிவித்துள்ளனர்.





தமிழ்நாடு அரசு நியாயவிலைக் கடை பணியாளர் சங்கத்தினர் தங்களது கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இதன் அடுத்த கட்டமாக தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் இன்று தொடங்க உள்ள நிலையில், அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் உள்ள இணைப்பதிவாளர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்த திட்டமிட்டு உள்ளனர்.





இதுகுறித்து தமிழ்நாடு அரசு நியாயவிலைக் கடை பணியாளர் சங்கத்தின் மாநில சிறப்புத் தலைவர் கு.பாலசுப்பிரமணியன் நேற்று சிதம்பரத்தில் செய்தியாளர்களிடம் கூறுகையில்,





தமிழகம் முழுவதும் உள்ள சுமார் 30 ஆயிரம் ரேஷன் கடை பணியாளர்களின் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பல கட்ட போராட்டங்களை நடத்தியுள்ளோம்.





5 முறை அரசு அழைத்து பேச்சுவார்த்தை நடத்தி உள்ளது. ஆனால் இதுவரை உறுதி அளித்தபடி எந்த கோரிக்கையையும் அரக நிறைவேற்றவில்லை என குற்றம் சாட்டிய பாலசுப்பிரமணியன்,






கொரோனாவால் இதுவரை 6 ரேஷன் கடை பணியாளர்கள் உயிரிழந்துள்ளனர். அவர்களில் இருவரின் குடும்பத்திற்கு மட்டுமே நிவாரணம் வழங்கப்பட்டு உள்ளதாகவும், மற்ற 4 குடும்பத்தினருக்கும் எந்த நிவாரணமும் வழங்கப்படவில்லை என கூறினார்.





தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் இன்று துவங்க உள்ள நிலையில் தங்களது கோரிக்கைகள் குறித்து பல்வேறு சட்டமன்ற உறுப்பினர்களிடம் மனு அளித்துள்ளதாகவும், அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் இன்று தமிழகம் முழுவதும் நியாயவிலைக் கடை பணியாளர் சங்கத்தினர் அடையாள வேலை நிறுத்தம் செய்து, மாவட்ட இணைப் பதிவாளர் அலுவலகம் முன்பு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட உள்ளனர் .


Top Post Ad

Below Post Ad