தகவல் உரிமைச் சட்டத்தின் கீழ் தகவல் தர மறுத்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என சுற்றறிக்கை அனுப்ப ஆணையிடப்பட்டுள்ளது. அனைத்து துறைகள், பொதுத்துறை நிறுவனங்களுக்கு அனுப்ப தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தகவல்களை வழங்க மறுக்கும் பொது தகவல் அதிகாரிகள் பதவியில் நீடிக்கத் தகுதியில்லை என நீதிபதி வைத்தியநாதன் கூறியுள்ளார்.