Type Here to Get Search Results !

கொரோனா பாதிப்பு: மத்திய இணை அமைச்சர் சுரேஷ் அங்கடி மரணம்


கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ரெயில்வே துறை இணை அமைச்சர் சுரேஷ் அங்கடி உயிரிழந்தார். 65-வயதான சுரேஷ் அங்கடி கர்நாடக மாநிலம் பெலகாவி மக்களவை தொகுதியில் இருந்து 4 முறை பாராளுமன்றத்திற்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார்.  கொரோனா பாதிப்பால் உயிரிழக்கும் 4-வது பாராளுமன்ற உறுப்பினர் சுரேஷ் அங்கடி ஆவர்.


மத்திய ரயில்வே துறை இணை அமைச்சர் சுரேஷ் அங்காடியின் மறைவிற்கு பிரதமர் நரேந்திர மோடி தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார்

கர்நாடகாவில் பாஜகவின் வளர்ச்சிக்கு முக்கிய பங்காற்றியவர் என்று பிரதமர் குறிப்பிட்டுள்ளார்

Top Post Ad

Below Post Ad