ஐபிஎல் தொடரிலிருந்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர் ஹர்பஜன் சிங் விலகுவதாக அறிவித்துள்ளார். அணி நிர்வாகத்துடன் மோதல் ஏற்பட்டதை அடுத்து, சுரேஷ் ரெய்னா விலகிய நிலையில், தனிப்பட்ட காரணங்களுக்காக விலகுவதாக ஹர்பஜன் சிங் விளக்கம் அளித்துள்ளார். ஆனால், சிஎஸ்கே அணி நிர்வாகத்துடன் ஏற்பட்ட கருத்துவேறுபாடு காரணமாக தான் அவர் விலகியதாக கூறப்படுகிறது.
2018-ல் ரூ. 2 கோடிக்கு ஹர்பஜன் சிங்கை சிஎஸ்கே அணி தேர்வு செய்தது. கடந்த வருட ஐபிஎல் போட்டியில் 11 ஆட்டங்களில் 16 விக்கெட்டுகளை ஹர்பஜன் வீழ்த்தினார்.