புறநகர் ரயில்களை சென்னையில் இயக்குவது குறித்து தெற்கு ரயில்வே பரிசீலித்து வருகிறது. ரயில்வே துறை டிஐஜி அருள் ஜோதி இது பற்றி கூறும் போது
சென்னை மாநகரில் புறநகர் ரயில் சேவை விரைவில் தொடங்க உள்ளது. இதில் பயணிகள் பயணிக்க தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை நடத்தி வருகிறோம். மேலும் பயணிகள் ரயிலில் பயணம் ,மேற்கொள்ளும் போது சமூக இடைவெளியை கடைப்பிடிக்க அனைத்து நடவடிக்கையும் நாங்கள் எடுத்து வருகிறோம் என்றார்.
குறைந்த அளவு ரயில்கள்
விரைவில் அறிவிப்பு வரும்
இதனிடையே முதல்கட்டமாக குறைந்த அளவிலேயே மின்சார ரயில்கள் இயக்கப்பட வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதற்காக, மின்சார ரயில்களில் தூய்மை மற்றும் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அண்மையில் ரயில் வட்டாரங்கள் கூறுகையில், சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மின்சார ரயில் சேவை மீண்டும் தொடங்குவது குறித்து ரயில் வாரியத்திடம் அனுமதி கேட்கப்பட்டுள்ளது. எனவே, வாரியத்தின் அனுமதி வந்தவுடன் மின்சார ரயில் சேவை மீண்டும் தொடங்கப்படும் என்று தெரிவித்திருந்தனர். ரயில்வே துறை டிஐஜி அருள் ஜோதியும் விரைவில் ரயில் சேவை தொடங்கும் என்று கூறியிருப்பதால், எப்போது வேண்டுமானாலும் புறநகர் ரயில் சேவை அறிவிப்பு வெளியாகலாம் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.