*
சாத்தான்குளம் பழைய பஸ்நிலையம் காமராஜர் சிலை முன்பு பனைகம்பு கடை, செல்போன் கடை நடத்தி வந்த ஜூன் 19ம்தேதி ஊரடங்கை மீறி கடை நடத்தியதாக சாத்தான்குளம் போலீசார் ஜெயராஜ், பென்னிக்சை அழைத்து சென்று தாக்கியதில் கோவில்பட்டி சிறையில் இருவரும் அடுத்தடுத்து உயிரிழந்தனர்.
பென்னிக்ஸ் வீட்டில் டாமி என்ற நாய் வளர்த்து வந்துள்ளார். அவர் செல்போன் கடைக்கு செல்லும் போது நாயும் உடன் செல்லும். கடந்த இரு மாதங்களாக அவரை காணாமல் தினமும் பூட்டியிருந்த கடைக்கும் வீட்டிற்குமாக அலைந்து கொண்டே இருந்தது.
இந்நிலையில் சாத்தான்குளத்தில் பென்னிக்ஸின் செல்போன் கடையை உறவினர் நேற்று திறந்தார்.
பென்னிக்சின் சித்தி ஜோதி மகன் இம்ரான், அவரது மனைவி மும்தாஜ் ஆகியோர் பென்னிக்ஸ் நடத்திய கடையில் நேற்று புதிய செல்போன் கடை திறந்தனர். கடை திறந்திருப்பதை கண்ட டாமி, பென்னிக்ஸை தேடி கடைக்கு வந்து அங்கேயே சுற்றிச்சுற்றி வந்துள்ளது. பின்னர் கடை வாசலில் படுத்து கொண்டது.
இது பார்ப்பவர்களை நெகிழச்செய்தது.
அவர் வளர்த்த நாய் பாசத்துடன் பென்னிக்சை தேடி கடை வாசலில் படுத்திருப்பது சமூகவலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.