பெற்றோரை கவனிக்காத பிள்ளைகள் மீது புகார் அளித்தால் 6 வார காலத்திற்குள் மனு மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வருவாய் கோட்டாட்சியர்களுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இது தொடர்பான மனுவில், மத்திய அரசு, 2007ஆம் ஆண்டு கொண்டு வந்த பெற்றோர், மூத்த குடிமக்கள் நலன் மற்றும் பராமரிப்பு சட்டத்தை, அமல்படுத்தும் வகையில் தமிழக அரசு 2009ஆம் ஆண்டு விதிகளை வகுத்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மனுவை விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், ஆர்.ஹேமலதா அமர்வு, பெற்றோரை கவனிக்காத பிள்ளைகள் மீது புகார் அளித்தால் 6 வார காலத்திற்குள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வருவாய் கோட்டாட்சியர்களுக்கு உத்தரவிட்டு வழக்கு முடித்துவைக்கப்பட்டது.