Type Here to Get Search Results !

பேருந்தில் நடத்துநரிடம் ரூ.5 கட்டணம் செலுத்தி முகக்கவசம் பெற்றுக் கொள்ளலாம்! - அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர்



தமிழகத்தில் மக்களின் தேவைக்கேற்ப பாதுகாப்புடன் கூடுதல் பேருந்துகள் இயக்கப்படும் என்றும் போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். 

கொரோனா ஊரடங்கு பிறகு இன்று மாவட்டங்களுக்கு இடையே போக்குவரத்து சேவை தொடங்கப்பட்டுள்ளது. .அதே சமயம் பேருந்தில் பயணம் செய்வது தொடர்பாக நிலையான வழிகாட்டு நெறிமுறைகளும் வெளியிடப்பட்டுள்ளன. இந்நிலையில், கரூரில் பேருந்து நிலையத்தில் போக்குவரத்துதுறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், பொது மக்களின் பயன்பாட்டுக்கு ஏற்ப கூடுதலான பேருந்துகள் படிப்படியாக இயக்கப்படும் என்று தெரிவித்தார்.

தேவையான பாதுகாப்பு வசதிகளும் உரிய முறையில் மேற்கொள்ளப்படும் என்றும் அவர் தெரிவித்தார். அரசு அறிவித்துள்ள விதிமுறைகளின் படி தனியார் பேருந்துகள் இயங்கலாம் என்றும் அவர் குறிப்பிட்டார். மேலும் அரசு பேருந்துகளில் பயணம் செய்வோர் முகக்கவசம் அணிய வேண்டும் என்றும், அவ்வாறு அணியவில்லை என்றால் நடத்துநரிடம் ரூ.5 கொடுத்து முகக்கவசம் பெற்றுக் கொள்ளலாம் என்றும் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.


Top Post Ad

Below Post Ad