தமிழகத்தில் 4 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியிருப்பதாவது:
தமிழகத்தில் 4 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் கனமழை தொடர வாய்ப்பு உள்ளது.
தென்தமிழகம், மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள், காரைக்காலில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது.
அவலாஞ்சி, பந்தலூரில் தலா 11, சின்னக்கல்லார், மைலாடி, ஹாரிசன் எஸ்டேட் பகுதியில் தலா 9 செ.மீ. மழை பதிவாகி உள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.