கோயம்பேடு காய்கறி சந்தை அடுத்த மாதம் 28ஆம் தேதி திறக்கப்படுகிறது தனிநபருக்கு அனுமதி மறுப்பு உட்பட பல்வேறு கட்டுப்பாடுகள் விதிப்பு
சென்னை, ராமநாதபுரம், விழுப்புரம் மாவட்டங்களில் மழை. தமிழகத்தில் 15 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு என வானிலை மையம் அறிவிப்பு.
ரிசர்வ் வங்கி மூலம் மாநில அரசுகள் கடன் பெற ஏற்பாடு மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவிப்பு.
மாணவர்களின் மன உளைச்சலை குறைக்கவே அரியர் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டன முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி விளக்கம்.
நீட் தேர்வை எதிர்த்து ஒடிசா, ஆந்திரா, தெலங்கானா, கேரளா மாநிலங்களில் வழக்கு தொடர வேண்டும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கடிதம்.
நீட்,ஜேஇஇ தேர்வு எழுதுவதை மாணவர்கள் விரும்புவதாக மத்திய அமைச்சர் ரமேஷ் போக்ரியால் கருத்து 24 மணி நேரத்தில் பெரும்பாலானோர் ஹால் டிக்கெட்டுகளை பதிவிறக்கம் செய்ததாகவும் விளக்கம்
பல்கலைக்கழகங்களின் இறுதி ஆண்டு செமஸ்டர் தேர்வுகள் ரத்தாகுமா? பல்கலைக்கழக மானியக் குழுவின் அறிவிக்கைக்கு எதிரான வழக்கில் உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பு
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 4 லட்சத்தை கடந்தது கடந்த 15 நாட்களில் மட்டும் ஒரு லட்சம் பேருக்கு தொற்று
அந்தமானில் ஆதிவாசிகள் 5 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டது மேலும் பலருக்கு பரவியிருக்கலாம் என அச்சம்.
வெளி மாநிலங்களில் இருந்து வரும் தொழில் துறையினருக்கு நிபந்தனைகளுடன் இ பாஸ் தளர்வு அளித்தது தமிழக அரசு