*கன்னியாகுமரி காங்கிரஸ் எம்.பி. வசந்தகுமார்காலமானார் - அவருக்கு வயது 70
*சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு
*ஆகஸ்ட் 10 முதல் கொரோனா பாதிப்புக்கு சிகிச்சை பெற்றுவந்த நிலையில் உயிரிழப்பு
*இரவு 7 மணியளவில் உயிரிழந்ததாக தகவல்
கொரொனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி உயிர்பிரிந்தது. அவரது மறைவுக்கு அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
நாளை இறுதி சடங்கு அவரது சொந்த ஊரான கன்னியாகுமரியில் நடைபெற உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மறைந்த வசந்தகுமார் பாரம்பரிய காங். குடும்பத்திலிருந்து வந்தவர் என்பதால் சிறுவயது முதலே காங். கட்சியில் தன்னை அர்ப்பணித்துக்கொண்டார். இரண்டு முறை எம்.எல்.ஏ.வாகவும், தற்போது கன்னியாகுமரி லோக்சபா தொகுதி காங். எம்.பி.யாகவும் உள்ளார்