*அதிபர் புதின் மகளுக்கு தடுப்பூசி போடப்பட்டு சோதனை வெற்றி பெற்றதாக தகவல்
*மாஸ்கோவில் உள்ள ஹேமாலயா இன்ஸ்டிடியுட் மற்றும் ரஷ்ய ராணுவ ஆராய்ச்சி நிறுவனம் இணைந்து சாதனை
*செப்டம்பர் மாதம் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வரும் எனவும் அறிவிப்பு!
இதுபற்றி புதின் தெரிவித்ததாவது:
"எனக்குத் தெரிந்து கரோனா வைரஸ் பாதிப்புக்கு எதிரான தடுப்பு மருந்து உலகிலேயே முதன்முறையாக இன்று காலைதான் பதிவு செய்யப்படுகிறது. இந்தத் தடுப்பு மருந்தின் உற்பத்தியை வரும் காலத்தில் விரைவில் தொடங்க முடியும் என்று நம்புகிறேன். இது மிகவும் முக்கியமானது.
என்னுடைய மகள்களில் ஒருவருக்கு தடுப்பு மருந்து செலுத்தப்பட்டது. இந்தப் பரிசோதனை முயற்சியில் அவரும் அங்கம் வகிக்கிறார். அவருக்கு முதன்முறையாக தடுப்பு மருந்து செலுத்தப்பட்ட பிறகு உடல் வெப்ப நிலை 38 டிகிரி செல்ஷியஸ் ஆக இருந்தது. அடுத்த தினம், 37 டிகிரி செல்ஷியஸ் ஆனது." என்றார் அவர்.