தமிழகத்தில் நாளை தனியார் பேருந்துகள் இயக்கப்படாது என தனியார் பேருந்து உரிமையாளர்கள் அறிவித்துள்ளனர். இது தொடர்பாக தனியார் பேருந்து உரிமையாளர்கள் கூட்டாக வெளியிட்டுள்ள அறிவிப்பில், மாவட்டத்திற்குள் மட்டுமே இயக்கினால் எங்களுக்கு லாபம் கிடைக்காது, பேருந்தில் உள்ள இருக்கைகள் அனைத்தையும் பயன்படுத்த அனுமதிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
கோரிக்கை நிறைவேறும் வரை தனியார் பேருந்துகள் இயக்கப்படாது என தனியார் பேருந்து உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர். (தினகரன்)