மாநிலங்களுக்கு உள்ளே மற்றும் வெளியே செல்ல இ-பாஸ் தேவையில்லை என்று மாநிலங்களுக்கு மத்திய அரசு கடிதம் அனுப்பியுள்ளது. மாவட்டம் விட்டு மாவட்டம் செல்லவோ, மாநிலம் விட்டு மாநிலம் செல்லவோ தனிநபர்களுக்கு கட்டுப்பாடு கூடாது.
சரக்கு மற்றும் தனிநபர் போக்குவரத்துக்கு எந்தவித கட்டுப்பாடும் இருக்கக்கூடாது என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது போக்குவரத்தை கட்டுப்படுத்த வேண்டாம் என்று மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. போக்குவரத்துக்கு கட்டுப்பாடுகள் விதிப்பது மத்திய அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை மீறுவதாகும். மாநில தலைமை செயலாளர்களுக்கு மத்திய உள்துறை செயலாளர் அஜய் பல்லா கடிதம் அனுப்பியுள்ளார்.
திருமணம், அவசர மருத்துவ சிகிச்சை, இறப்பு உள்ளிட்ட அவசர தேவைகளுக்கு மட்டும் மாவட்டம் விட்டு மாவட்டம் செல்ல இ-பாஸ் வழங்கப்படுகிறது. இருப்பினும் இந்த அவசரங்களுக்காக இ-பாஸ் விண்ணப்பித்தாலும் பலமுறை நிராகரிக்கப்படுகிறது.
இந்நிலையில் மாநிலங்களுக்கு உள்ளே மற்றும் வெளியே செல்ல இ-பாஸ் தேவையில்லை என்று மாநிலங்களுக்கு மத்திய அரசு கடிதம் அனுப்பியுள்ளது.