வணிக வளாகங்கள், அனைத்து ஷோரூம்கள் மற்றும் பெரிய கடைகள் 100 சதவீத பணியாளர்களுடன், மத்திய அரசின் குளிர்சாதன வசதி குறித்த வழிகாட்டு நடைமுறைகளை பின்பற்றியும், நிலையான வழிகாட்டு நடைமுறைகளை பின்பற்றியும் இயங்க அனுமதிக்கப்படுகிறது.
எனினும், வணிக வளாகங்களில் உள்ள திரையரங்குகள் இயக்க தடை தொடரும் என அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.இதனை தொடர்ந்து தமிழகத்தில் நாளை முதல் வணிக வளாகங்கள் திறக்கப்படுகின்றன.
இந்நிலையில், இதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு வெளிட்டுள்ளது. பொதுமக்கள் உள்ளிட்டோர் இதனை முறையாக கடைப்பிடிக்க வலியுறுத்தப்படுகிறது. இதன்படி,
* வாடிக்கையாளர்கள் முக கவசம் அணிந்திருப்பது கட்டாயம்.
* வாடிக்கையாளர்கள் உள்ளே வரவும், வெளியே செல்லவும் தனித்தனி வாசல்கள் இருக்க வேண்டும்.
* நோய் அறிகுறி உள்ளவர்களை அனுமதிக்கக் கூடாது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.