இன்று (ஆக.,11) ஒரேநாளில் சவரன் ரூ.984ம், கடந்த இருதினங்களில் ரூ.1,144யும் குறைந்துள்ளது.
சில தினங்களுக்கு முன் சவரன் ரூ.43 ஆயிரத்தை கடந்த நிலையில் கடந்த இரு தினங்களாக சற்று ஆறுதல் தரும் விதமாக தங்கம் விலை குறைந்து வருகிறது. இன்று ஒரேநாளில் சவரன் ரூ.984 குறைந்ததோடு, இருதினங்களில் சவரன் ரூ.1,144 குறைந்துள்ளது.
இன்று மாலைநேர நிலவரப்படி, 22காரட் ஒருகிராம் ஆபரணத்தங்கத்தின் விலை ரூ.123 குறைந்து ரூ.5,242க்கும், சவரன் ரூ.984 குறைந்து ரூ.41,936க்கும், 24காரட் 10கிராம் தங்கத்தின் விலை ரூ.55,080க்கும் விற்பனையாகிறது.அதேசமயம் வெள்ளியின் விலை காலையில் உயர்ந்த நிலையில் மாலையில் சரிந்தது. ஒருகிராம் சில்லரை வெள்ளி 60 காசுகள் குறைந்து ரூ.82.80க்கு விற்பனையாகிறது.