60 வயதிலும் அழியாத காதல்... மனைவிக்கு மெழுகுச் சிலை வைத்த கணவர்!
வீடியோ
சாலை விபத்தில் உயிரிழந்த மனைவிக்கு அவரது கணவர் மெழுகுச் சிலை வைத்திருப்பது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடக மாநிலம் பெல்லாரி அருகே கொப்பல் பகுதியைச் சேர்ந்த கிருஷ்ணன் என்பவரின் மனைவி கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு சாலை விபத்தில் உயிரிழந்தார். இந்நிலையில், கிருஷ்ணன் தனது புதுமனை புகுவிழா நிகழ்ச்சியை நடத்த திட்டமிட்டிருந்தார். இந்த நிகழ்ச்சியில் மறைந்த தனது மனைவியின் பங்கேற்பும் இருக்க வேண்டும் என்று நினைத்த அவர், மனைவியின் உருவம் போன்ற மெழுகு சிலையயை தத்ரூபமாக வடிவமைத்துள்ளார். புதுமனை புகுவிழா நிகழ்ச்சியில் வைக்கப்பட்ட இந்த சிலையை, உற்றார் உறவினர் பிரமிப்போடு பார்த்துச் சென்றனர். தங்களின் தாயார் மீண்டும் உயிரோடு வந்ததாக அவர்களது மகள்கள் கூறினர். இச்சம்பவம் அனைவர் மத்தியிலும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.