Type Here to Get Search Results !

உச்சத்தில் தங்கம் விலை சவரன் ரூ. 43000- ஐநெருங்கியது


நாளுக்கு நாள் வேகமாக அதிகரித்து வரும் தங்கம் விலை இன்றும் அதிகரித்து இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நேற்று தங்கம் விலை ஒரே நாளில் சவரனுக்கு ரூ.976 உயர்ந்து ரூ.42,592க்கு விற்பனை ஆனது. அதேபோல 1 கிராமுக்கு ரூ.122 உயர்ந்து ரூ.5,324க்கு விற்பனை அனது. இந்நிலையில் இன்று காலை சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.216 உயர்ந்து ரூ.42,808க்கு விற்பனை ஆகிறது. அதாவது கிராமுக்கு ரூ.27 உயர்ந்து ரூ.5,351க்கு விற்பனை ஆகி வருகிறது.

ஆனால் தற்போதைய நிலவரத்தின் படி சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.400 உயர்ந்து ரூ.42,992க்கு விற்பனை ஆகிறது. அதாவது கிராமுக்கு ரூ.50 உயர்ந்து ஒரு கிராம் தங்கம் ரூ.5,374-க்கு விற்பனை ஆகிறது.

Top Post Ad

Below Post Ad