நாடு முழுவதும் ஓட்டுனர் உரிமம் உள்ளிட்ட அனைத்து வகையான மோட்டார் ஆவணங்களும் டிசம்பர் 31 வரை செல்லுபடியாகும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.இதுதொடர்பாக மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சகம் திங்களன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சகமானது நாடுமுழுவதும் வாகன உறுதிச் சான்றிதழ்கள், உரிமைச் சான்றிதழ்கள், அனுமதிச் சான்றிதழ்கள், பதிவுச் சான்றிதழ்கள் மற்றும் வாகனங்கள் தொடர்பான அனைத்து வகையான ஆவணங்களின் செல்லுபடித் தேதியை டிசம்பர் 30 வரை நீட்டிப்பது என்று முடிவெடுத்துள்ளது .பொதுமுடக்கத்தின் காரணமாக நீட்டிக்க முடியாத இவ்வகையான அனைத்து ஆவணங்கள் மற்றும் பிப்ரவரி 1, 2020 துவங்கி டிசம்பர் 30, 2020 வரை காலாவதியாகும் ஆவணங்கள் என அனைத்தும் டிசம்பர் 31 வரை செல்லுபடியாகும் எனக் கருத வேண்டும் என்று அலுவலர்களுக்கு துறை அறிவுறுத்தியுள்ளது.முன்னதாக இத்தகைய ஆவணங்களின் செல்லும் தன்மை செப்டம்பர் 30, 2020 வரை நீட்டிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
ஓட்டுனர் உரிமம், வாகன பதிவு சான்றிதழ் ஆகியவை டிசம்பர் 31 ஆம் தேதி வரை செல்லுபடியாகும் என அறிவிப்பு