சென்னை வானிலை மையம் வெளியிட்ட அறிக்கை:
நீலகிரி, கோவை, தேனி மாவட்டங்களில் அதீத கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதால், ரெட் அலர்ட் உள்ளது.திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, குமரி மாவட்டங்களில் மிக கனமழை பெய்யக்கூடும்.
சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, ஈரோடு, திண்டுக்கல், வேலூர் மாவட்டங்களில் கனமழை பெய்யலாம்.
கடலில் 3.5 மீ. இருந்து 4. மீ., உயரம் வரை அலைகள் எழும்பக்கூடும். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.