வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் தமிழகத்தில் 12 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் பலத்த மழை பெய்யக்கூடும் எனவும் தெரிவித்துள்ளது. சென்னை, திருவள்ளூர், வேலூர், சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் கூறியுள்ளது.