ஆந்திராவில் நீண்ட நேரம் பப்ஜி எனும் ஆன்லைன் விளையாட்டை விளையாடிய 12ம் வகுப்பு மாணவன் மாரடைப்பால் உயிரிழந்தது அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது. பிரகாசம் மாவட்டம் சைனத்தக்குறி கிராமத்தில் 12ம் வகுப்பு மாணவன் முரளி பப்ஜி எனப்படும் செல்போன் விளையாட்டை நீண்ட நேரமாக விளையாடியதாக கூறப்படுகிறது.
கொரோனா ஊரடங்கால் பள்ளிகள் செயல்படாத நிலையில், ஆன்லைன் விளையாட்டில் மூழ்கிய மாணவனுக்கு மனஅழுத்தம் ஏற்பட்டிருக்கிறது. இதையடுத்து, தாயின் அருகே சென்ற மாணவன் திடீரென மயங்கி விழுந்ததை கண்டு பெற்றோர் அதிர்ச்சி அடைந்துள்ளனர். உடனடியாக மாணவனை மீட்டு சீரளா அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றதில் மாணவன் வழியிலேயே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். தொடர்ந்து மாணவனின் உடலை கைப்பற்றி உடற்கூறாய்வு செய்த போது மாரடைப்பு ஏற்பட்டு மாணவன் உயிரிழந்திருப்பது தெரியவந்தது.
Source Dinakaran