Type Here to Get Search Results !

சத்துணவு சாப்பிடும் குழந்தைகளுக்கு உதவும் வகையில் அரசு உத்தரவு; அரசு பள்ளி மாணவர்களுக்கு அரிசி, பருப்பு வினியோகம்


அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்களில் பத்தாம் வகுப்பு வரை மதிய சத்துணவு வழங்கப்பட்டு வருகிறது. தற்போது கொரோனா பரவல் காரணமாக ஊரடங்கு அமலில் உள்ளதால் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இந்த சூழ்நிலையில் பள்ளிகளில் வழங்கப்பட்டு வந்த சத்துணவு திட்டத்தில் சாப்பிடும் மாணவர்களின் உடல்நலத்தை கருத்தில் கொண்டு, அவர்களுக்கு உலர் உணவுப் பொருட்களை வழங்க வேண்டும் என தமிழக அரசு உத்தரவிட்டிருந்தது.

 இந்த உத்தரவின்படி அரசுப்பள்ளி மாணவர்களுக்கு அரிசி மற்றும் பருப்பு வினியோகம் செய்யப்படுகிறது. அதற்காக, அனைத்து அரசு பள்ளிகளுக்கும் தேவையான அரிசி மற்றும் பருப்பு அனுப்பப்பட்டுள்ளன. இதனை தொடர்ந்து அவற்றை மாணவர்களுக்கு வினியோகிக்கும் பணி நடைபெற்று வருகிறது, சென்னை அமைந்தகரையில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் மாணவர்களுக்கு அரிசி மற்றும் பருப்பு  வழங்கப்பட்டது. சமூக இடைவெளியை பின்பற்றி ஒவ்வொரு நாளும் குறிப்பிட்ட மாணவர்களை மட்டும் அழைத்து அரிசி மற்றும் பருப்பு வழங்கப்படுவதாக ஆசிரியர்கள் தெரிவித்துள்ளனர்.
Source Dinathanthi

Top Post Ad

Below Post Ad