கர்நாடகாவின் ஹாவேரியின் ஹங்கல் நகரில் சில தினங்களுக்கு முன் வாசவி பட்டேபுர் என்ற பெண்ணுக்கு பிரசவ வலி ஏற்பட்டது.
அவரை மருத்துவமனை அழைத்து செல்ல வாகனங்கள் கிடைக்கவில்லை. இதனால் மருத்துவர் ஒருவர் உதவியுடன் வீடியோ கால் மூலமாக அருகிலிருந்த பெண்கள் பிரசவம் பார்த்து அசத்தியுள்ளனர். இதில் அப்பெண்ணுக்கு ஆண் குழந்தை பிறந்தது.